காப்புரிமை கோரி 79,000 விண்ணப்பங்கள்

திங்கள், 2 ஆகஸ்ட் 2010 (16:42 IST)
நிறுவனங்களும், தனி நபர்களும் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புக்களுக்கும், வடிவமைப்புகளுக்கும் காப்புரிமை கோரி 79,000 விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளன என்று மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த் சர்மா, 2003-04ஆம் ஆண்டிலிருந்து குவியத் துவங்கியுள்ள இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து காப்புரிமை வழங்குவதற்காக 200 தகுதிபெற்ற பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

“ஜூ்ன் 30ஆம் தேதிவரை இந்திய காப்புரிமை அலுவலகத்திற்கு 78,792 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவைகளை வேகமாக சரிபார்த்து காப்புரிமை வழங்குவதற்காக அந்த அலுவலகத்திற்கு மேலும் 200 பேரை பணியமர்த்த ஒப்புதல் அளித்துள்ளோம” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்