முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வது ஐதீகம். தீய சக்திகள் இருக்கும் வாய்ப்பு உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேரானது விநாயகர் சிலை உருவாக்க பயன்படுத்த கூடாது.
வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்த வேண்டும். வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாகும். எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்துவிடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.
வெள்ளெருக்கு பிள்ளையாரை புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12குள் ராகு காலத்தில், அந்த விநாயகர் சிலை முழுவதும் அரைத்த மஞ்சளை பூசி வைக்கவும். இதுபோல் அடுத்த வெள்ளிக்கிழமை ராகுகால சமயத்தில் சந்தன விழுதை விநாயகர் சிலை முழுவதும் பூசி நிழலிலேயே உளற வைத்துக்கொள்ள வேண்டும்.