ஆறு மாதமாக ஆர்ப்பாட்டமில்லாத அரசியல் - டிடிவி. தினகரன்

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:37 IST)
இன்று முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி என்பதால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரொனா காலகட்டம் என்பதால் கடந்த ஆறு மாத காலமாக அமைதியாகவு, ஆர்ப்பாட்டம் இல்லாத வகையிலும் அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், கொரோன தொற்றால் நமக்கும் பிறருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதால் கூட்டங்கள் இல்லாதவாறு செயல்படுமாறு தன்கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார் டிடிவி தினகரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்