புதிய பாறைப்பிளவே ஹைட்டி பூகம்பத்திற்குக் காரணம்

சனி, 14 ஆகஸ்ட் 2010 (14:15 IST)
ஹைட்டியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்குக் காரனம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பூமியின் அடியில் உள்ள புதிய பாறைத்தள பிளவுகளே என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஹைட்டி பூகம்பங்களுக்குக் காரணமானதாகக் கருதப்பட்ட பாறைப்பிளவு இல்லை இது.

ஆனால் இந்த புதிய பாறைப்பிளவு ஹைட்டியின் புவிஅமைப்பை எவ்வாறு மாற்றி அமைக்கவுள்ளது, அதன் அபாயம் பற்றியெல்லாம் இனிமேல்தான் தரவுகள் சேகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேற்கு லஃபாயெட்டில் உள்ள பர்டியூ பல்கலை. பேராசிரியர் எரிக் கலைஸ் தனது இந்த புதிய கண்டுபிடிப்பு பற்றி பிரேசிலில் விவரிக்கவுள்ளார்.

ஏற்கனவே ஹைட்டியின் புவிஅமைப்பில் கண்டு பிடிக்கப்பட்ட என்ரிக்கிலோ பாறைப் பிளவு அல்ல இது. ஆனால் அடியாழத்தில் இந்தப் பாறைப்பிளவுடன் இந்த புதிய பாறைப்பிளவு இணைந்திருக்கலாம் என்ற வாய்ப்பும் இனிமேல்தான் ஆய்ந்தறியப்படவேண்டும் என்கிறார் இவர்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாறைப்பிளவினடியில் எவ்வளவு அழுத்தம் ஏறியுள்ளது என்பதும் இன்னமும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்