சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்திற்கு உட்பட்ட கிங் சவுத் மெடிகல் சிட்டி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன் மூன்று வருட அனுபவம் பெற்ற அவசரப் பிரிவு (Emergency) மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவில் (ICU)அனுபவத்துடன் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள், பிஎஸ்சி/டிப்ளமோ தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்ற பயோஸ்டேடிஸ்டியன்கள் (Biostatistician), எகோ டெக்னிசியன்கள் (Echo Technicians) மற்றும் தரக் கட்டுப்பாடு பணியாளர்களுக்கான (Quality Control) நேர்முகத் தேர்வு 28.11.2014 முதல் 30.11.2014 வரை புதுடில்லியில் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் அனுபவம் இருப்பின், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றுடன், எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு