கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் பணிக்குத் தேர்வு குறைகிறது!
வியாழன், 1 நவம்பர் 2012 (13:24 IST)
ஐ.டி. உட்பட பல நிறுவனங்கள் தற்போது புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்க கேம்பஸ் இன்டெர்வியூ நடத்தி தேர்வு செய்து வருகின்றன. ஆனால் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டெர்வியூ அவ்வளவு சிறப்பாக இல்லை என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வேலைவாய்ப்புகளை அறிவிக்கும் நாக்ரி. காம் இணையதளத்தின் ஃபர்ஸ்ட் நாக்ரி.காம் நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
125 நிறுவனத்திடம் இது பற்றி கருத்தாய்வு நடத்தியபோது 56 சதவீதத்தினர் 2013ஆம் ஆண்டு கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் மாணவர்களை பணிக்குத் தேர்வு செய்வது குறைந்து விடும் என்று கூறியுள்ளனர்.
மேலாண்மை பட்டப்படிப்பு மாணவர்களை கேம்பஸில் தேர்வு செய்யும் நிறுவனத்தினர் கூறும்போது 2013ஆம் ஆண்டு கேம்பஸ் இன்டெர்வியூ அவ்வளவாக இருக்காது என்றனர்.
பொறியியல் கல்லூரிகளிலிருந்து பட்டதாரிகளை வேலைக்குத் தேர்வு செய்யும் நிலை பற்றி கலப்பான பார்வையே எழுந்துள்ளது. இதிலும் 50 சதவீத நிறுவனத்தினர் கேம்பஸ் இன்டெர்வியூவிலிருந்து தேர்ந்தெடுக்க மாட்டோம் என்று கூற மீதி நிறுவனம் கேமப்ஸ் இன்டெர்வியூ தொடரும் என்று கூறியுள்ளனர்.
இன்று கேமபஸ் இன்டெரிவியூ மூலம் புதுமுகங்களை பெருமளவு தேர்வு செய்து வரும் ஐ.டி. நிறுவனங்கள் கேமபஸ் இன்டெரிவியூவிற்கு பாதிப்பில்லை என்றே கூறியுள்ளனர். அதிலும் 47% நிறுவனங்கள் தங்களது பணியாளர் தேர்வு நிச்சயம் குறையும் என்று கூறியுள்ளனர்.
பொருளாதார நிச்சயமின்மைகள், வளர்ச்சி விகிதத்தில் மந்தத் தன்மையினால் இந்த முறை கேம்பஸ் இன்டெர்வியூவில் அதிகம் தேர்வு இருக்காது என்றே ஒட்டுமொத்தமாக கருதப்பட்டுவருகிறது.
ஆனாலும் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வு இருக்கும் அது போன ஆண்டு அளவுக்கு எண்ணிக்கையில் அதிகமிருக்காது என்றே இந்த ஆய்வு கூறுகிறது.
கேம்பஸ் இன்டெர்வியூவில் மாணவர்களிடம் தாங்கள் எதிர்கொள்ளும் குறைகளாக சிலவற்றை சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கம்யூனிகேஷன் திறமை மற்றும் எழுத்துத் திறன் ஆகியவையே பெரிய இடைஞ்சலாக உள்ளது என்று சில நிறுவனங்கள் தெரிவிக்க, மற்ற சில நிறுவனங்கள் மாணவர்களின் சம்பள எதிர்பார்ப்பு நிறுவனங்களை ஓட வைக்கிறது என்று கூறியுள்ளது.