இரயில்வே பணியமர்த்தல் வாரியத் தலைவர்கள் மாற்றம்: மம்தா அதிரடி உத்தரவு
சனி, 7 நவம்பர் 2009 (19:19 IST)
இரயில்வேயில் பணியாளர்களைத் தேர்வு நடத்தி நியமனம் செய்யும் இரயில்வே பணியமர்த்தல் வாரியங்களின் (Railway Recruitment Board - RRB) தலைவர்கள் 20 பேரை அதிரடியாக மாற்றிவிட்டு புதிய தலைவர்களை நியமித்துள்ளார் இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி.
இரயில்வே பணியமர்த்தலுக்கான தேர்வுகளில் அளிக்கப்படும் கேள்வித்தாள்கள் அடிக்கடி வெளியான புகார்களையடுத்து இந்த நடவடிக்கையை மம்தா மேற்கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.
அதுமட்டுமின்றி, தற்போதுள்ள வாரியத் தலைவர்கள் அனைவரும் முன்னாள் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே அவர்களை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய தலைவர்களை மம்தா பானர்ஜி நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.