25-ந் தேதி +2 தே‌ர்வு மதிப்பெண் பட்டியல்

வெள்ளி, 15 மே 2009 (11:37 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் +2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தேர்வு முடிவையும் மதிப்பெண் விவரத்தையும் தங்கள் பள்ளியிலும், இணையதளங்கள் மூலமாகவு‌ம் உடன‌டியாக‌த் தெரிந்து கொண்டனர்.

மேற்படிப்புக்கோ, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்வதற்கோ +2 மதிப்பெண் பட்டியல் அவசியம்.

தேர்வு எழுதிய மாணவர்களு‌க்கு விரைவாக மதிப்பெண் பட்டியல் வழங்க அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25-ந் தேதி அன்று தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்