தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை வெளியீடு
வியாழன், 5 டிசம்பர் 2013 (10:30 IST)
6 லட்சத்து 50 ஆயிரம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் (Key Answer) வெளியிடப்பட்டுள்ளது.
FILE
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அரசுப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு வைத்து ஆட்களை தேர்ந்து எடுத்து அரசுக்கு கொடுக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. படித்த தகுதி உள்ளவர்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் நியமிக்கப்படுவார்கள். பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்களுக்கு குருப்-2, குரூப்- 1 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 1 ஆம் தேதி குரூப்-2 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு 114 நகரங்களில் 2ஆயிரத்து 269 மையங்களில் நடந்தது. மொத்தம் 5 லட்சம் பேர் எழுதினார்கள்.
தேர்வு எழுதியவர்கள் தாங்கள் எழுதிய கேள்விகளுக்கான விடைகள் சரியாக உள்ளதா எத்தனை மதிப்பெண் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் விடை தேவை. அதன்படி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை (Key Answer) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பதிலில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கவேண்டும். அதன்பிறகு இறுதி விடை வெளியிடப்பட உள்ளது.