மும்மொழி ஆன்-லைன் அகராதி: காஷ்மீர் பல்கலை. அறிமுகம்

வியாழன், 3 செப்டம்பர் 2009 (14:08 IST)
ஆங்கிலம்-காஷ்மீரி-ஹிந்தி உள்ளிட்ட மும்மொழி ஆன்-லைன் அகராதியை காஷ்மீர் பல்கலைக்கழகம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 12 ஆயிரம் வார்த்தைகளுக்கு பொருள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் ரியாஸ், மும்மொழி ஆன்-லைன் அகராதி அறிமுகம், பல்கலைக்கழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். காஷ்மீரி மொழி தெரியாவதவர்களுக்கு இந்த அகராதி பெரிதும் உதவும்.

இதேபோல் காஷ்மீரி மொழி கற்க விரும்பும் காஷ்மீரைச் சாராதவர்களுக்கும் விரைவில் புதிய மொழிப்படிப்பை அறிமுகம் செய்யவும் காஷ்மீர் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்