SBI எழுத்தர் பணி: 11,000 காலி இடங்களுக்கு 36 லட்சம் பேர் விண்ணப்பம்

திங்கள், 21 செப்டம்பர் 2009 (12:18 IST)
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 11 ஆயிரம் எழுத்தர் பணியிடத்துக்கு 36.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் காலியாக உள்ள 1,100 இடங்களுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தனியார் நிறுவனங்களில் சமீபகாலமாக பணியாளர் குறைப்பு, சம்பள குறைப்பு செய்யப்பட்டதால், பணி பாதுகாப்பு கருதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள எழுத்தர் பணியிடத்திற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எழுத்தர் பணியிடங்களுக்கு எதிர்பார்த்ததை விட ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால் ஒரு நாளில் 2 ஷிப்ட் வீதம் மூன்று நாட்களில் தேர்வு நடத்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒருநாளில் சுமார் 12 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள்.

நவம்பர் மாதம் 8, 15, 22 ஆகிய மூன்று தேதிகளில் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது. தேர்வு முடிந்த ஒரு வாரத்திற்குள் முடிவுகளை வெளியிட எஸ்.பி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்