பிளஸ் 2 தனித்தே‌ர்வு‌: ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க ‌மீ‌ண்டு‌ம் வா‌ய்‌ப்பு

வியாழன், 10 செப்டம்பர் 2009 (16:15 IST)
பிள‌ஸ் 2 த‌னி‌த்தே‌ர்வு எழுதுவதற்காக கு‌றி‌த்த தே‌தி‌யி‌ல் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க தவ‌றிய மாணவர்கள், ‌‌சிற‌ப்பு அனும‌தி ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌வி‌ண்ண‌ப்‌பி‌‌க்கலா‌‌ம் எ‌ன அரசு தேர்வுத்துறை தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

இதுதொட‌ர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்‌பி‌ல், பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தனித் தேர்வுகள் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கடைசி தேதி அறிவிக்கப்பட்டது. அந்த கடைசி தேதியில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்பு கட்டணமாக செலுத்த வேண்டும். 'எச்' வகை தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35 செலுத்த வேண்டும். 'எச் பி' வகை தேர்வர்கள் ரூ.150 மற்றும் ரூ.35 செலுத்த வேண்டும்.

சிறப்பு கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை, ‘அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-06என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.

ஏற்கனவே தேர்வுக் கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தனித் தேர்வர்கள் சிறப்பு கட்டணமாக ரூ.1000 மட்டும் டிடி எடுத்து அனுப்பினால் போதும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஆதாரங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள், 14ஆ‌ம் தேதி முதல் 16ஆ‌ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 16ஆம் தேதியன்று, அரசுத் தேர்வுத் துறையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்