பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வினியோகம்

புதன், 9 செப்டம்பர் 2009 (12:26 IST)
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் வரும் 12ஆம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிளஸ் 2 தனித்தேர்வு இம்மாதம் துவங்கி அடுத்த மாதம் வரை நடைபெறுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு நாளை (10ஆம் தேதி) முதல் 12ஆம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும். அவர்கள் இருப்பிடத்தின் அருகே உள்ள தேர்வு மையத்தில் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு மைய விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் நாளிதழ்களில் வெளியிடப்படும்.

ஹால்டிக்கெட்டில் தங்கள் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், பாடங்கள், தேர்வு நாட்கள் ஆகிய விவரங்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா? என்பதை மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரின் கூடுதல் செயலாளரை (மேல்நிலை) நேரிலோ அல்லது தபால் மூலமாக தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்