சிறந்த ஆசிரியர்களுக்கு இன்று தேசிய விருது

சனி, 5 செப்டம்பர் 2009 (15:21 IST)
சிறந்த ஆசிரியர்களுக்கு 2008ஆம் ஆண்டுக்கான தேசிய விருது இன்று வழங்கப்படுகிறது. புதுடெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி இந்த விருதை ஆசிரியர்களுக்கு வழங்குகிறார்.

மாநில அரசுகள் பரிந்துரைத்த ஆரம்ப மற்றும் துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், சி.பி.எஸ்.சி. பரிந்துரைத்த ஆசிரியர்கள், இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு கவுன்சில், மத்திய திபெத்திய பள்ளி நிர்வாகம், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா சமிதி, சைனிக் பள்ளிகள் பரிந்துரைத்த 300 ஆசிரியர்கள் இன்று விருது பெற உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்