புதிதாக 25,000 பணியாளர் நியமிக்க டி.சி.எஸ். திட்டம்

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (16:23 IST)
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), அடுத்த ஒரு ஆண்டில் 25,000 பணியாளர்களை புதிதாக சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.சி.எஸ். நிறுவனத்தின் துணைத் தலைவர் தன்மோய் சக்கரவர்த்தி, தற்போது டி.சி.எஸ். நிறுவனத்தில் 1.45 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தாண்டில் மேலும் 25 ஆயிரம் பணியாளர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான லீமென் பிரதர்ஸ் திவாலானதால் உலகம் முழுவதும் சரியத் துவங்கிய தகவல் தொழில்நுட்பததுறையில், தற்போது மீண்டும் சகஜ நிலை திரும்புவதை டி.சி.எஸ். பணியாளர் சேர்க்கை அறிவிப்பு உணர்த்துவதாக இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்