மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது. மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.
மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்.
மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருகிறது. மன அழுத்த நோய் உருவாவதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதால், கூடுதலான மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.