சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றை நீக்க உதவும் நெறிஞ்சில் !!
நெறிஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் போன்ற நோய்களைப் போக்கும் குணமுடையது.
உடல் எரிச்சல், வெண்புள்ளி, மேகம் போன்ற நோய்களை யானை நெறிஞ்சில் குணமாக்கும் தன்மை கொண்டது.
நெருஞ்சி முள் கசாயம் ஆண்மை தன்மை குறைபாடு உள்ளவர்கள், தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்க்கையில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த நெரிஞ்சி முள் கசாயத்தை குடித்துவிட்டு வந்தோம் என்றால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
இந்த நெருஞ்சி சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தி சிறுநீர் பாதையில் உள்ள தொற்றை நீக்குகிறது. சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றை நீக்குகிறது.
கொழுப்பைக் குறைக்கும் தன்மை நெறிஞ்சில் அதிகம் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. நெருஞ்சி முள் இரத்தத்தில் சர்க்கரை அளவினை சரியாக வைக்கவும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
நெறிஞ்சில் செடி இரண்டை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் உடன் சேர்த்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி குடிநீராக ஐம்பது மிலி அளவு இருவேலை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும்.
கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், சிறுநீர் சொட்டு சொட்டாக போதல் குணமாகும். இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர் கட்டு சதை அடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்.
நெறிஞ்சில் சமூலம், கீழாநெல்லி சமூலம் இரண்டையும் சமமாக எடுத்து சேர்த்து மையாய் நன்றாக அரைத்து கழற்சி காயளவு எருமை தயிரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் கொடுக்க நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, ஊரல் போன்ற நோய்கள் தீரும்.
யானை நெறிஞ்சி செடிகளை நீரில் ஒரு மணி நேரம் போட்டு எடுத்த பின், அந்த நீரில் பட்டு நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு கரை நீங்கும்.