நார்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்ப்பதால் சர்க்கரையின் அளவு, கொழுப்புச் சத்தின் அளவு இரண்டையும் குறைக்கச் செய்யலாம்.
கோதுமையும் ராகியும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அல்ல. அளவுடன் தான் உண்ண வேண்டும். ஏனெனில் அரிசி, கோதுமை, ராகி மூன்றுமே கிட்டதட்ட ஒரே சக்தியை தருபவை.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். உதாரணமாக : முட்டையில் உள்ள மஞ்சள் கரு, மாட்டிறைச்சி, ஈரல், மூளை, ஆட்டுக்கறி, இறால், நண்டு, முந்திரி, பாதாம்பருப்பு, நிலக்கடலை, ஆட்டுக்கால் சூப்.
நார்ச்சத்து என்பது மிக அதிகமாக பச்சைநிற காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பயிறுகள் மற்றும் சில பழ வகைகளில் கிடைக்கிறது. இது பல வகையான மூலக்கூறுகள் கொண்ட எளிதில் ஜீரணிக்க முடியாத திடமான மாவுச்சத்து ஆகும். இதன் முக்கியமான தன்மை என்னவெனில், இதனை அவ்வளவு எளிதாக நமது இரைப்பை ஜீரணிக்க முடியாது. மேலும் இது உணவுப் பொருட்களின் மீது உறைபோல படிந்து சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களை அவ்வளவு எளிதாக குடல் வழியே உறிஞ்சவிடுவதில்லை.