மனைவி வரமா ? சாபமா ?

திங்கள், 17 ஏப்ரல் 2017 (13:14 IST)
எட்டு தோட்டாக்கள் படத்தில் வரும் எம் எஸ் பாஸ்கர் மனைவியை போல


 

இன்று எட்டு தோட்டாக்கள் படம் பார்த்தேன். அதில் எம் எஸ் பாஸ்கர் நடிப்பு சூப்பர். அந்த படத்தில் தனது மனைவியைப் பற்றி சொல்லும் போது மக ராசி சார் ! என்னுடன் 30 வருஷம் குடும்பம் நடத்தி, இரண்டு பிள்ளைகளை பெற்று, தான் கொடுக்கும் சம்பளத்தில் நிறைவாக குடும்பம் நடத்தியவள், மேலும் அவளுக்கு சர்க்கரை தான் சரியா கவனிக்கவில்லை என்று கண்ணீர் விடுகிறார். அவ இருக்கும் போது நான் ராஜா மாதிரி இருந்தேன் சார். ஆனா இப்போ நாதி அற்று இருக்கிறேன் என்று சொல்லும் போது நம்மை கண் கலங்க வைக்கிறார். நிச்சயம் அவர் மனைவி அவருக்கு வரமே !

ராட்சசி சார், அவ பொம்பளையா ? புடவை கட்டின பிசாசு சார் ! என தன் மனைவியை பற்றி புலம்பும் கணவன்மார்கள் அனைவரும் சாபம் பெற்றவர்களே ! கணவன் பேசும் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத மனைவியை பெற்றவர்கள் எல்லாம் வரம் பெற்றவர்களே !கணவனிடமே பெண்ணுரிமை, பொறாமை, அலட்சியம், பேசும் மனைவியை பெற்றவர்கள் எல்லாம் சாபம்  பெற்றவர்களே ! இன்னும் இந்த பத்திரகாளியை என் தலையில் கட்டிய என் அப்பனை சொல்லனும் என்று புலம்பாதவர்கள் எல்லாம் வரம் பெற்றவர்களே !

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஆனால் உங்க அம்மா இப்படி பேசினா ? உங்க அக்கா அப்படி பேசினா ? என புலம்பும் மனைவியை பெற்றவர்கள் எல்லாம் சாபம்  பெற்றவர்களே. இக்கட்டான தருணத்தில் நம்ம வீட்டுகாரர் தானே  ஒரு வார்த்தை தானே, என அமைதி காக்கும்  மனைவியை பெற்றவர்கள் எல்லாம் வரம் பெற்றவர்களே !

அவன் போடுற சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, சற்றும் நன்றி இல்லாமல் எங்க அப்பன் அதை பண்ணுனான் ! இதை பண்ணுனான் ! நீ என்னத்தை கிளுகிச்ச என கேட்கும் மனைவிகளை பெற்றவர்கள் மகா சாபம் பெற்றவர்கள். மொத்தத்தில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.


இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]

 

வெப்துனியாவைப் படிக்கவும்