உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது மேற்கு இந்திய தீவுகள் அணி

சனி, 29 ஜூன் 2019 (11:14 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக குறைவான புள்ளிகளை பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறுகிறது.

இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் மிகவும் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்த், இங்கிலாந்த் ஆகிய அணிகள் புள்ளிவிவரப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்திருக்கின்றன.

இதனிடையே உலகக் கோப்பை தொடரின் 34 ஆவது லீக் போட்டியில் இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணி மோதின. அந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி படுதோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் 7 போட்டிகளை விளையாடி வெறும் ஒரு போட்டி மட்டுமே வென்ற நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி, அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வாகாமல் வெளியேறுகிறது.

இந்நிலையில் தனது அடுத்த போட்டியில் இலங்கை அணியுடன் ஜூலை மாதம் 1 ஆம் தேதி, இங்கிலந்தின் செஸ்டர் லே ஸ்டிரீட் நகரில் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பங்கு அளப்பரியது. 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் மேற்கு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. மேலும் 1983 ஆம் ஆண்டு இறுதிச்சுற்றுக்கு மேற்கு இந்திய அணி தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்