இந்திய அணியின் தோல்வியால் ஆத்திரம்: வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள்

வியாழன், 11 ஜூலை 2019 (08:20 IST)
இந்திய அணி நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததை இன்னும் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இறுதி போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பார்த்த இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது
 
முதல் மூன்று விக்கெட்டுக்கள் எதிர்பாராமல் போய்விட்டாலும் நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி 240 என்ற எளிய இலக்கை அடைந்திருக்க அதிக வாய்ப்பு இருந்தும் வெற்றி கைநழுவியது ரசிகர்களுக்கு பெரும் ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. ஜடேஜா மற்றும் தோனி நன்றாக விளையாடியிருந்தாலும் அவர்கள் நிச்சயம் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்திருக்க வேண்டும் என்றும், தோனி இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் விளையாடியிருக்கலாம் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் நேற்று இந்திய அணி தோல்வி என்ற செய்தியை கேட்டதும் கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய வீரர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும், இந்திய வீரர்களுக்கு எதிராக அவர் கண்டன முழக்கங்களை எழுப்பிதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. 
 
இதேபோல் மான்செஸ்டர் மைதானத்தில் போட்டியை நேரடியாக பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய அணியின் தோல்வி எதிர்பாராதது என்றும், மகேந்திர சிங் தோனி இரண்டாவது ரன்னுக்கு அவசரப்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். உலகின் பெஸ்ட் ஃபினிஷர் என்ற பெயர் பெற்ற தோனி இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்திருக்கலாம் என்றே பலரது கருத்தாக உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்