”பேக்கரி வைத்தாவது பிழைத்து கொள்ளுங்கள், கிரிக்கெட்டிற்கு யாரும் வரவேண்டாம்”…கிரிக்கெட் வீரரின் கண்ணீர் பதிவு

செவ்வாய், 16 ஜூலை 2019 (13:18 IST)
பேக்கரி வைத்தாவது பிழைப்பை நடத்தி கொள்ளுங்கள், தயவுசெய்து யாரும் கிரிக்கெட்டிற்கு வரவேண்டாம் என நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் கண்ணீர் மல்க தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதி போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக மோதிய நியூஸிலாந்து அணி, மிகவும் திறமையாக விளையாடியும் ஐசிசியின் பவுண்ட்ரி விதியால் தோல்வியை தழுவியது. இந்த பவுண்ட்ரி விதி மிகவும் கண்டிக்கத்தக்கது என ஐசிசியின் உலக கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஜிம்மி நீசம், தனது டிவிட்டர் பக்கத்தில் பெரும் கவலையோடு தனது பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில், ”இங்கிலாந்து அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த போட்டி நியூஸிலாந்து வீரர்களை பெரிதும் காயப்படுத்தியுள்ளது. இனி பத்தாண்டுகளுக்கு இறுதி போட்டியில் நடந்த அந்த கடைசி 10 நிமிடங்களை மறக்கமுடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும், ”சிறுவர்களிடம் ஒரே ஒரு கோரிக்கை தான். வருங்காலத்தில் பேக்கரி வைத்தாவது பிழைப்பு நடத்திக்கொள்ளுங்கள், தயவு செய்து கிரிக்கெட்டிற்கு யாரும் வரவேண்டாம்” என கண்ணீர் மல்க அவரது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஜிம்மியின் டிவிட்டர் பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  

Kids, don’t take up sport. Take up baking or something. Die at 60 really fat and happy.

— Jimmy Neesham (@JimmyNeesh) July 15, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்