நேற்று நடைபெற்ற ஐபிஎல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கினால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. மெக்கல்லம் 71 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் மோகித் சர்மா 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்தப் போட்டியின் ஒரு சில விசேஷ தருணங்களைப் பார்ப்போம்.
வினோதம் 1:
36 பந்துகளில் அதிரடி சதம் கண்டு உலக சாதனை படைத்த கோரி ஆண்டர்சன் ஐபிஎல். கிரிக்கெட்டில் 45வது பந்தில் தன் முதல் சிக்சரை அடித்தார். அதுவும் சுரேஷ் ரெய்னா பந்தில். இதே ஷாட்டை அவர் ஹில்பென் ஹாஸிடம் முயன்ற போது பந்து மிட்விக்கெட்டில் நன்றாக மேலெழும்பிச் சென்றது இரு பீல்டர்கள் கேட்சிற்குச் சென்றனர். இருவருக்க்ம் நடுவே பந்து 'தொப்'பென்று விழுந்தது..
வினோதம் 2:
சென்னை சூப்பர்கிங்ஸின் இன்றியமையாத வீரராக இருந்த மைக் ஹஸியை அந்த அணி கழற்றிவிட மும்பை இந்தியன்ஸ் ஆதரவு கொடுத்தது. ஆனால் கம்பீர் போன்று இவரும் இரட்டை இலக்கம் எடுக்க திணறிவருகிறார். நேற்று சக வீரரான ஹில்ஃபென் ஹாஸ் வீசிய அருமையான பந்தில் பவுல்டு ஆகி 1 ரன்னில் வெளியேறினார்.
வினோதம் 3:
மும்பை இந்தியன்ஸிற்கு முன்பு ஆடிய வைன் ஸ்மித் இப்போது சென்னை சூப்பர்கிங்ஸில் ஆடுகிறார். தனது முந்தைய உரிமையாளர் அணி என்பதனாலோ என்னவோ அவர் பிராக்யன் ஓஜாவுக்கு ஒரு மைடன் ஓவர் கொடுத்தார். 10வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார்.
ஆனால் அதன் பிறகு ஜாகீர் கான் உட்பட அனைவரையும் அடித்தார். துரத்தல் முடுக்கி விடப்பட்டது.
வினோதம் 4:
ஒரே ஓவரில் 3 அவுட்கள் கோட்டைவிட்ட மும்பை! அதுவும் பெரிய பீல்டர் போலார்ட், ஃபா டுபிளேசி அடித்த டாப் எட்ஜை, மிக மிக எளிதான கேட்சை கை வழியாக வாங்கி விட்டார். ஹர்பஜன் சிங் பவுலர். அதே ஓவரில் மீண்டும் மெக்கல்லம் அடிக்க கோரி ஆண்டர்சன் கேட்சை விட்டார். ஒரு ரன் அவுட் வாய்ப்பும் நழுவ விடப்பட்டது. இத்தனைக்கும் நடுவிலும் ஹர்பஜன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆனாலும் பயனில்லை.
தோனியின் தடவல்:
ஜாகீர் கான் வீசிய போது தோனி அவரை சிங்கிள் கூட எடுக்க முடியாமல் திணறினார். கால்காப்பில் வாங்கி வாங்கிச் சென்றது பந்து. அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் மலிங்கா ஒரு பந்தை லெந்தில் வீச வீறினார் சிக்சருக்கு தோனி. ஆகவே தோனிக்கு லெந்தில் போடக்கூடாது