பின்னர், சிபாபா 27 ரன்களும், சிபண்டா 38 ரன்களிலும், மருமா 17 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த வீரர்கள் சீட்டுக்கட்டை சரிந்தனர். 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்றிருந்த ஜிம்பாப்வே மேற்கொண்டு 19 ரன்கள் எடுப்பதற்குள் மிஞ்சிய 6 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் ஜாஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும், தவன் குல்கர்னி மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.