இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணரும் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள்!

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (15:00 IST)
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று உள்ளது என்பதும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறித்து இரு அணிகளும் கடைசியாக மோதிய ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற கே எல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சீட்டுக்கட்டு போல விக்கெட்களை இழந்து ஜிம்பாப்வே அணி தடுமாறி வருகிறது. தற்போது வரை 107 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

இந்தியா சார்பில் தீபக் சஹார் 3 விக்கெட்களும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் அக்ஸர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்