குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்… புது அவதாரமெடுக்கும் இந்திய வீரர்!

vinoth

புதன், 24 ஜூலை 2024 (07:24 IST)
கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.

ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இப்போது அவர் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இளம் வீரர்களுக்கு தனிப்பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணிகளில் ஒன்றாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு பெறப் போவதை அடுத்து புதிய பயிற்சியாளராக செயல்பட யுவ்ராஜ் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்