ஒரு கிரிக்கெட்ட் வீரர் எப்போது ஓய்வுபெறவேண்டும்?.. ஷமியிடம் கூறிய தோனி!

vinoth

திங்கள், 22 ஜூலை 2024 (10:01 IST)
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது. அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு கிரிக்கெட் வீரர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என நான் ஒருமுறை தோனியிடம் கேட்டேன். அதற்கு அவர் “முதலில் கிரிக்கெட் உனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நீ ஓய்வை அறிவித்துவிடவேண்டும். இன்னொன்று உன்னை அணியில் இருந்து வெளியில் அனுப்பிவிடுவார்களோ என தோன்றினால் நீ ஓய்வை அறிவித்து விடவேண்டும்’ எனக் கூறினார்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்