நான் விராத் கோலியின் உணர்வுகளை தடுக்கமாட்டேன்: அனில் கும்ப்ளே

திங்கள், 4 ஜூலை 2016 (17:33 IST)
இந்தியா கிரிக்கெட் அணி வரும் ஜுலை 21-ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது.


 

இதில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் வீரர்கள் பெங்களூரிலிருந்து ஜூலை 6-ஆம் தேதி புறப்பட உள்ளனர். இதுதொடர்பாக புதியதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்டத்தின் நடுவில் நான் அணியின் தலைவர் விராத் கோலியின் உணர்வுகளை தடுக்கமாட்டேன். அனைத்து வீரர்களும் உண்மையாக விளையாடினால் நான் எந்த தொந்தரவும் செய்யமாட்டேன்  என்று கூறினார்.

இது தொடர்பாக விராத் கோலி கூறுகையில், அணில் கும்லே எங்களுக்கு பயிற்சியாளராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. அவருடைய அனுபவங்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்றார் இந்த பயணத்தில் மேற்கிந்திய தீவுகளுடன் இந்தியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்