வங்கதேச தொடருக்கான அணியில் ஷமி ஏன் எடுக்கப்படவில்லை… இதுதான் காரணமா?

vinoth

திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:12 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் மூத்த வீரரான ஷமி இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் காயம் குணமாகி விட்டாலும், அவரை நேரடியாக அணியில் எடுக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடல்தகுதியை நிரூபித்த பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் ஷமியின் வயதை கருத்தில் கொண்டு, அவருக்கு மாற்றாக டெஸ்ட் அணிக்கு இளம் பவுலர்களை தயார் செய்யவும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதம் நடக்கும் ரஞ்சி கோப்பையில் அவர் விளையாடி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் ஆஸி தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்