7 ஆண்டுகளில் இல்லாத சரிவு… விராட் கோஹ்லிக்கு மேலும் ஒரு சறுக்கல்!

வெள்ளி, 29 ஜூலை 2022 (10:19 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி தன் ஃபார்மை மீட்டெடுக்க போராடி வருகிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

கணிசமான ரன்களை அவர் சேர்த்து வந்தாலும் அவரின் பழைய பார்ம் இல்லை என்பதால் அடுத்தடுத்து அவருக்கு சறுக்கல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் கோஹ்லி முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்து வந்தார். ஆனால் இப்போது முதல்முறையாக அவர் ஏழாவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளார். 740 புள்ளிகளோடு அவர் 7 ஆம் இடத்தில் இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்