தனது திறமையான விளையாட்டின் மூலம் கிரிக்கெட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் விராட் கோலி. கிரிக்கெட் மட்டுமல்லாமல், தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். உடல் கட்டமைப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர், தான் குடிக்கும் தண்ணீரில் கூட அதிக கவனம் செலுத்துவாராம்.
இதனால், பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடிநீரைத்தான் அவர் தொடர்ந்து அருந்தி வருகிறாரம். அந்த குடிநீரின் விலை ஒரு லிட்டர் ரூ.600 என தெரிய வந்துள்ளது. இந்த தகவலை ஆரோக்கியம் தொடர்பான ஒரு இணையத்தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.