இந்த நிலையில், இலங்கை அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த வனிந்து ஹசரங்கா, அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து ஒரு வீரராக அணிக்கு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.