227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பங்களாதேஷ்… அஸ்வின் & உமேஷ் அபாரம்!

வியாழன், 22 டிசம்பர் 2022 (15:42 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் இப்போது நடந்து வருகிறது.

இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்த பங்களாதேஷ் அணி 227 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். வங்கதேச பேட்ஸ்மேன் மோமினல் அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து இந்திய அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய விளையாடி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்