உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது.
இந்நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக இன்சமாம் உல் ஹக் தன்னுடைய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாமும் விலக, அவருக்கு பதில் ஷாகின் அப்ரிடி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.