கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபற்றி மேலும் “ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கி ரன்கள் அடிப்பது எளிது. ஆனால் மிடில் ஆர்டரில் ரன்கள் சேர்ப்பது கஷ்டம். கேப்பைக் கண்டறிந்து அதற்கான ஸ்ட்ரோக்கை சரியாக ஆடி பவுண்டரிகள் எடுக்க வேண்டும். அதை சரியாக செய்த தோனி, யுவ்ராஜ் சிங் போல சூர்யகுமார் யாதவ்வும் செய்வார். 20 பந்துகளில் 50-60 ரன்களை அடித்து விடுவார் அவர். அதனால் அவர் அணியில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.