இந்த நாளில் அன்று : கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஹாட் ட்ரிக் எடுத்து சேத்தன் சர்மா உலக சாதனை

சனி, 31 அக்டோபர் 2015 (15:39 IST)
28 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வீரர் சேத்தன் சர்மா தொடர்ந்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றும் ஹாட் ட்ரிக் [Hat-trick] விக்கெட்டினை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
 

 
1987ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நாக்பூரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா அணி விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா இந்த சாதனையைப் படைத்தார்.
 
அவரது 6ஆவது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் முறையே, கென் ரூதர்ஃபோர்ட், இயன் ஸ்மித் மற்றும் எவன் சாட்ஃபீல்ட் ஆகியோர் அவுட்டாகி வெளியேறினர். இதுதான் உலகக் கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட முதல் ஹாட் ட்ரிக் விக்கெட் ஆகும்.
 
ஒரு கட்டத்தில் 182/5 என்ற கணக்கில் இருந்த நியூசிலாந்து அணியை இவரது ஹாட் ட்ரிக் விக்கெட் அந்த அணியை குறைந்த ரன்கள் எடுப்பதற்கு உதவியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்