இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! வலுவான நிலையில் இந்திய அணி..! 322 ரன்கள் முன்னிலை..!!

Senthil Velan

சனி, 17 பிப்ரவரி 2024 (19:16 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இதை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து  விக்கெட்களையும் இழந்து 319  ரன்கள் எடுத்தது.
 
126 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

ALSO READ: பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா? ஆய்வு செய்ய இபிஎஸ் கோரிக்கை

அதிகபட்சமாக இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் எடுத்துள்ளார். சுப்மன் கில் 65 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியை விட 322 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்