இதனை அடுத்து 215 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 18.5 ஓவர்களில் மும்பை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியின் இசான் கிசான் மிக அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக ஆடிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
போட்டி முடிந்த பின்னர் பேசிய சூர்யகுமார் “வெற்றி பெற்றாலும், நான் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். கடந்த போட்டியிலும் நான் இதே தவறை செய்தேன். நான் இந்த போட்டியில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நல்ல டச்-ல் இருந்த இஷான் கிஷானுக்கு உதவியாக இருந்தேன். நான் பெரிய ஹிட்டர் இல்லை. ஆட்கள் இல்லாத இடங்களிலும் டைமிங்கிலும் ரன்களைக் குவிப்பவன்” என பேசியுள்ளார்.