இதனை அடுத்து 215 என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய நிலையில் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஆனால் அதே நேரத்தில் மும்பை அணியின் இசான் கிசான் மிக அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார் என்பதும் கடைசி நேரத்தில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.