நான்காவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது மிகவும் தவறு… மூத்த வீரர் கண்டனம்!

vinoth

செவ்வாய், 5 மார்ச் 2024 (07:05 IST)
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. சமீபத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

அந்த போட்டியில் அவருக்கு பதிலாக அணியில் இணைந்த ஆகாஷ் தீப் சிறப்பாக பந்துவீசியதால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. ஆனாலும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது தவறான முடிவு என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய அவரது பேட்டியில் “மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா 23 ஓவர்கள் மட்டுமே வீசினார். அப்படி இருக்கும் போது அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வளித்தது தவறான முடிவு. நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான போட்டி. ஒருவேளை இந்த போட்டியை இந்திய அணி தோற்றிருந்தால் கடைசி போட்டி தொடரை முடிவு செய்யும் போட்டியாக அமைந்திருக்கும். பும்ராவுக்கு ஓய்வளிக்கும் முடிவை என் சி ஏ எடுத்ததோ அல்லது பும்ராவே எடுத்தாரா , அது அணிக்கு நன்மை பயக்கும் முடிவு இல்லை. ஆனாலும் நான்காவது போட்டியில் இந்திய அணியின் வெற்றி அணிக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்