சேர்ந்து பீர் குடிக்கலாமா: ரஹானேவிடம் கேட்ட ஸ்மித்!
செவ்வாய், 28 மார்ச் 2017 (15:43 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இந்நிலையில் தொடர் முடிந்ததால் இந்திய வீரர்களுடன் சேர்ந்து பீர் குடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் குளுமையான தர்மசாலாவில் நடந்தது. நான்கு நாட்களுடன் இந்த டெஸ்ட் முடிவடைந்ததால் இரு அணி வீரர்களும் தர்மசாலாவிலே இன்று தங்கியுள்ளனர்.
Steve Smith just told me he asked Rahane if the Aussies can join India for a beer in the dressing rooms. The right way to end it. #INDvAUSpic.twitter.com/uEuaie2g7D
இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட ரஹானேவிடம் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உங்கள் அணியுடன் சேர்ந்த நாங்கள் பீர் குடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என கேட்டுள்ளார். இதனை கேட்ட ரஹானே, கேட்டு சொல்கிறேன் என சிரித்தவாறே பதில் கூறியிருக்கிறார்.
இதனை ஸ்மித் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் அலிஸ்டர் நிக்கோல்சனிடம் கூறியுள்ளார். அவர் இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இப்படித்தான் ஒரு கிரிக்கெட் தொடரை நட்போடு முடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.