ஆடை அணியாமல் விக்கெட் கீப்பிங்... வைரலாகும் விமன் ப்ளேயரின் புகைப்படம்!

திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (15:11 IST)
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த சாரா டெய்லர் ஆடை இல்லாமல் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானவர் சாரா டெய்லர். இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 
 
சமீபத்தில் எந்த போட்டிகளிலும் பங்கேற்காத இவர் ஆடை இல்லாமல் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்யும் புகப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படத்தை ஏன் வெளியிட்டேன் என்ற காரணத்தை தெரிவித்துள்ளார். 
சாரா கூறியதாவது, என்னை குறித்து தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது கூச்சத்தை எனக்கு கொடுத்தது. இருந்தாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான் என குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படத்தை சாரா இங்கிலாந்தில் வெளியாகும் நாளிதழுக்க்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளிதழ் மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வவை பரப்பி வருகிறது. அதற்காகவே இதை அனுப்பியதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்