என்ன இப்படி ஆவேசமாயிட்டாரு… ரிஷப் பண்ட்டின் அலட்சியத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரோஹித் ஷர்மா!

vinoth

செவ்வாய், 25 ஜூன் 2024 (08:32 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஜூன் 27 ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி 205 ரன்கள் இலக்காக சேர்க்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அந்த சமயத்தில் ரன் ரேட் 10 ரன்களுக்கு மேல் செல்ல ஆட்டம் அவர்கள் கையில் இருந்தது.

அப்போது மிட்செல் மார்ஷ் அடித்த ஒரு பந்து ரிஷப் பண்ட்டுக்கு அருகில் கேட்ச்சாக சென்றது. ஆனால் அவர் அதை ஜம்ப் செய்து பிடிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டார். இதைப் பார்த்து கடுப்பான கேப்டன் ரோஹித் ஷர்மா ஆவேசமாகக் கத்தி கோபத்தை வெளிப்படுத்தினார். இது சம்மந்தமான வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்