மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து விளையாடுவதுதான் என் ஸ்டைல்… ஆட்டநாயகன் சூர்யகுமார்!

vinoth

வெள்ளி, 21 ஜூன் 2024 (10:42 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 53 ரன்களும் ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.. இதனை அடுத்து இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் சூப்பர் 8 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர் “இந்த இன்னிங்ஸுக்கு பின்னால் நிறைய உழைப்பு உள்ளது. திட்டத்தைக் களத்தில் செயல்படுத்தும் விதமாக நம்முடைய ஆட்டம் இருக்க வேண்டும். ஹர்திக் விளையாட வரும்போது எந்த மாற்றமும் இல்லாமல் அட்டாக் செய்தே விளையாடுவோம் எனக் கூறினேன். பந்து கொஞ்சம் பழையதாக மாறி ரிவர்ஸ் ஆனது. அதனால் 16 ஓவர்கள் வரை அடித்தாடி அதன் பின்னர் இறுதி ஓவர்களில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன். எனக்கு அளித்த இந்த விருதை பவுலர்களுக்கு அளித்திருந்தாலும் சரியான முடிவாகவே கருதுவேன். பவுலர்கள் 7 முதல் 15 ஓவர்களில் அடித்தாட நினைப்பார்கள். அப்போது அட்டாக் செய்து விளையாடியது மகிழ்ச்சி.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்