ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தால் 218 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் அதிரடியாக விளையாடி 103 ரன்கள் சேர்த்தார். ஐபிஎல் போட்டிகளில் இது அவரின் முதல் சதமாகும்.
இந்த போட்டியில் வழக்கமாக நான்காவது இடத்தில் இறங்கும் சூர்யகுமார் யாதவ் மூன்றாவதாக இறங்கினார். இதுபற்றி பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “தொடரின் ஆரம்பத்தில் இடது கை – வலது கை பேட்ஸ்மேன் காம்பினேஷன் இருக்க வேண்டும் என ஆலோசித்தோம். ஆனால் நேற்று சூர்யா பிடிவாதமாக நேற்று இறங்கினார். இதுதான் அவரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை மற்ற வீரர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். அவர் ஒவ்வொரு போட்டியையும் புதிதாக தொடங்குகிறார். பழைய போட்டிகளைப் பற்றி நினைப்பதில்லை.” எனக் கூறியுள்ளார்.