தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “இது உயர் அழுத்தத்தைக் கொடுக்கும் விளையாட்டு என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைக் கடந்துதான் ஆகவேண்டும். ரிஸ்வானுக்கும் நவாஸுக்கும் இடையே பார்ட்னர்ஷிப் உருவானபோது கூட நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் சிறிது கூடுதல் நேரம் தாக்குப் பிடித்துவிட்டது. அவர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர்.
நான் சொன்னது போல் நீங்கள் பாகிஸ்தானுக்கு பாராட்டுகளைக் கொடுக்க வேண்டும். அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். கோலி, மற்றவர்கள் நிலைத்து நின்றார். நீண்ட நேரம் பேட் செய்ய ஒருவர் தேவைப்பட்டார். அவரும் அந்த டெம்போவுடன் பேட் செய்தார். அந்த ஸ்கோரை விராட் பெறுவது அணியின் பார்வையில் முக்கியமானது. அப்போது ஹர்திக், ரிஷப் ஆகியோரின் விக்கெட்டுகள் தேவை இல்லாதவை. ” எனக் கூறியுள்ளார்.