“ரோஹித் ஷர்மா மும்பை அணியிலேயே தொடர்வார்..” – இந்திய வீரர் கணிப்பு!

vinoth

வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (08:15 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்த ரோஹித் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

அதனால் அவர் ஏலத்தில் வரும் பட்சத்தில் அவரை எத்தனைக் கோடி கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் அணிக்காக எடுக்க லக்னோ உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. அவரை எடுக்க 50 கோடி ரூபாய் வரைக் கொடுக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்வார் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது “ஒரு கட்டத்தில் வீரர்கள் பணம் புகழ் எல்லாம் அடைந்து திருப்தியை நோக்கி நகர்வார்கள். அப்படி ரோஹித் ஷர்மாவும் எதுவும் வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர வாய்ப்புள்ளது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்