நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி கோலி போல ஆக்ரோஷமாக இல்லை என்றும் அவர் வீரர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுபற்றி பேசிய அவர் "ரோஹித் விமர்சிக்கப்படும் விதத்தில், மக்கள் சற்று அதிகமாகப் போவதை நான் காண்கிறேன். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, ஒரு நபர் மட்டும் உங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. பிசிசிஐயின் ஆதரவை ரோஹித் பெற வேண்டும். அவர் எந்த அளவுக்கு ஆதரவைப் பெறுவார் என்று எனக்குத் தெரியவில்லை இருப்பினும் அத்தகைய ஆதரவைப் பெறுவது சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க அவருக்கு உதவும்.” என ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.