RCB அணியின் மைல்ஸ்டோன் வெற்றி! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம்!

புதன், 6 ஏப்ரல் 2022 (10:55 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான நேற்றைய வெற்றி ஆர் சி பி அணியின் 100 ஆவது ஐபிஎல் வெற்றியாகும்.

நேற்றைய RCB vs RR ஐபிஎல் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து,பெங்களுர் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.  

இதையடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணி ஒரு கட்டத்தில் 70 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்நிலையில் பின் வரிசை வீரர்களான தினேஷ் கார்த்திக் , சபாஷ் நதீம் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இறுதி ஓவரில் RCB அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி RCB அணியின் மைல்ஸ்டோன் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ஆர் சி பி அணி ஐபிஎல் போட்டிகளில் 100 வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக சி எஸ் கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் ஆகிய அணிகள் மட்டுமே 100 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்