உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பே ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இல்லாதது அணிக்கு பின்னடைவாக அமையும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும் அவர் “உலகக்கோப்பை போன்ற தொடர்களில் அரையிறுதி வரை செல்வது முக்கியம். பூம்ரா, ஜடேஜா இல்லாததால் நம் அணியில் இருந்து புதிய சாம்பியன்கள் உருவாகலாம்.” எனக் கூறியுள்ளார்.